தாயை கொலை செய்த மகன் தலை மறைவு.

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு.

அலவ்வ, மாபோபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் அவரது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று (2023.12.16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாபோபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் உயிரிழந்தவரின் இளைய மகன் என்பதும், அவர் குடித்துவிட்டு வந்து தனது தாயுடன் தகராறு செய்த நிலையில் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு | The Son Who Killed His Mother Is Deadசம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.