மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞனுக்கு சிக்கல்!

மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞனுக்கு சிக்கல்!

16 வயதுடைய பாடசாலை மாணவியை முத்தம் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் வனாத்தவில்லுவ பொலிஸாரல் கைது செய்துள்ளனர்.

நேற்று (27) மாலை மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞனுக்கு சிக்கல்! | Problem For The Young Man Who Kissed The Studentஇதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் தனது கையை பிடித்து இழுத்து முகத்தில் முத்தமிட்டதாக குறித்த மாணவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தில் எழுவன்குளம் – ரால்மடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டின் படி, பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.