காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! எழுந்துள்ள சந்தேகம்.

காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! எழுந்துள்ள சந்தேகம்.

பதுளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், ஹாலிஎல - ரொக்கத்தன்ன பகுதியில் இன்றைய தினம் (19-11-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! எழுந்துள்ள சந்தேகம் | Youth Died Due To Electric Shock Forest Badullaரொக்கத்தன்ன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரொக்கதன்ன பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த குறித்த இளைஞர், வீடு திரும்பாததையடுத்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! எழுந்துள்ள சந்தேகம் | Youth Died Due To Electric Shock Forest Badulla

இந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி குறித்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.