
தந்தையின் மரணசான்றிதழை பெற சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம்.
உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழை எடுக்கச் சென்ற மகன் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற ரந்திக பியூமல் கமகே என்ற (21) வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தனது தந்தையின் மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக புலத்சிங்களவில் இருந்து ஹொரணைக்கு பயணித்துள்ளார்.
இவ்வாறு பயணித்த போது கீழ் நரகல பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலத்சிங்கள காவல் நிலையபிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி காவல் பரிசோதகர் செனவிரத்ன உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.