லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை.

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை | Litro Gas Price Listஇதன்படி புதிய விலை 3 ஆயிரத்து 470 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 393 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 650 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.