மருத்துவர் எடுத்த விபரீத முடிவு -சிக்கியது கடிதம்!!

மருத்துவர் எடுத்த விபரீத முடிவு -சிக்கியது கடிதம்!!

அரச வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் விபரீத முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

மொனராகலை வெலியாய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதான மருத்துவர் ஒருவரே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவராவார்.

மருத்துவர் எடுத்த விபரீத முடிவு -சிக்கியது கடிதம் | Doctor Committed Suicide After Writing The Letter

வெலியாய பகுதியில் அமைந்துள்ள மருத்துவரின் பிரத்தியேக இல்லத்திலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

குறித்த மருத்துவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தன்னுடைய இந்த தற்கொலைக்கு எவரையும் சந்தேகிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.