மூன்றாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 56,000 ஐ கடந்தது
நாட்டில் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,252 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் 6,721 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, 343 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 1,272 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
540 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
2,191 பேருக்கு பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 1,333 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 982 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
48 பேருக்கு மொடர்னா முதலாம் தடுப்பூசியும், 12 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.