சீரற்ற வானிலையால் கெனியன், மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
சீரற்ற வானிலை காரணமாக கெனியன் மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் சில வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கெனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதன் காரணமாக கெனியன், லக்ஸபான, புதிய லக்ஸபான, பொல்பிட்டி மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக அதிகளவில் மின்னுற்பத்தி இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.