நேற்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது
நாட்டில் நேற்றைய நாளில், 116,151 பேருக்குக் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, 61,713 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,889 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
7,330 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 38,640 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
3,125 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியும், 3,390 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
ஸ்புட்னிக்-வி இரண்டாம் தடுப்பூசி 57 பேருக்கும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.