திருப்தி ஏற்படும் பட்சத்தில் பாடசாலைகள் அடுத்தமாதம் மீள ஆரம்பமாகும் - வைத்தியர் அன்வர் ஹம்தானி (காணொளி)

திருப்தி ஏற்படும் பட்சத்தில் பாடசாலைகள் அடுத்தமாதம் மீள ஆரம்பமாகும் - வைத்தியர் அன்வர் ஹம்தானி (காணொளி)

பாடசாலைகளை அடுத்த மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

எமது சூரியன் எப்.எம் வானொலியில் நேற்றைய தினம் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.