தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் - ஜோசப் ஸ்டாலின்

தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் - ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று(16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.