
சிறுமி கடத்தல் விவகாரம்: மேலும் நால்வர் கைது!
15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் வரை 28 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியை விற்பனை செய்வதற்காக மேலும் நான்கு இணையத்தளங்கள் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் நேற்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த விருந்தகம் ஒன்றின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.