22 இலட்சம் ரூபா பெறுமதியான போதைபொருட்களுடன் ஒருவர் கைது

22 இலட்சம் ரூபா பெறுமதியான போதைபொருட்களுடன் ஒருவர் கைது

ஹொரணை - போருவதண்ட பகுதியில் 22 இலட்சம் ரூபா பெறுமதியான 1,100 போதைப்பொருட்கள் அடங்கிய செயற்கை முத்திரைகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை வான்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவலொன்றுக்கமைய, காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி காவல்துறைமா அதிபர் அருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 37 வயதுடைய சந்தேகத்துக்குரிய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.