13 இலட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை திருடிய இருவர் கைது

13 இலட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை திருடிய இருவர் கைது

தனமல்லவில பகுதியில் சர்வோதயா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து 13 இலட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவரை தனமல்லவில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனமல்லவில, கதிர்காமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளில் ஒருதொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் எஞ்சிய நகைகள் விற்கப்படும்போது மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர்களை வெல்லவாய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.