தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம் இன்றையதினமும் நாட்டின் பல இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொழும்பு நகரில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் போதைப் பொருட்களுடன் கைதாகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.