யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சிகிச்சைக் களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை அஞ்சல் மூலம் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொவிட்-19 நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள 021 22 14 249 அல்லது 021 22 22 261 அல்லது 021 22 23 348 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.