பேலியகொடை மீன் சந்தை மூன்று தினங்களுக்கு மூடப்படும்
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பேலியகொடை மீன் சந்தையினை மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 26,27,28 ஆகிய திகதிகளில் பேலியகொடை மீன் சந்தை மூடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பேலியகொடை மீன் சந்தை நாளைய தினம் திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.