மறுசீரமைப்பை முன்னெடுக்குமாறு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை

மறுசீரமைப்பை முன்னெடுக்குமாறு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நடாளுமன்ற தெரிவுக்குழுவில் தெரியவந்துள்ளன.

கோப் குழுவில் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் சட்ட பிரிவொன்று இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனவே விசாரணைகளை மேற்கொள்ள எந்தவொரு அதிகாரியும் இல்லை.

அத்துடன் புதிய விடயங்களை உள்ளீர்ப்பதற்கான அனுபவம் தொடர்பில் சிக்கல் நிலைமை உள்ளது.

எனவே மறுசீரமைக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்