
இலங்கையில் பருப்பிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கண்டுபிடிப்பு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து தற்போது பருப்பில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்திருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
வெலிகம பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பருப்பில் “Aflatoxin” என்ற புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினூடாக இதனை உறுதி செய்ததாக வெலிகம பிராந்திய பிரதம பொது சுகாதார பரிசோதகர் M.M.H.நிஹால் குறிப்பிட்டார்.
அந்த வகையில் குறித்த பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்திலிருந்து காலாவதியான, நுகர்விற்கு பொருந்தாத 3150 கிலோகிராம் பருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
காலாவதியான யோகட் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, இந்த விற்பனை நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுகர்வோருக்கு இது சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் என பிரதம பொது சுகாதார பரிசோதகர் M.M.H.நிஹால் எச்சரித்துள்ளார்.