
தலைதுண்டிக்கப்பட்ட சடலம் தொடர்பில் இனி விசாரணையில்லை!
கொழும்பு-டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க போவதில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண,சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டதனால் விசாரணை நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்