
நாட்டின் நோய்த்தடுப்பு கொள்கை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விடயம்
ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு சேவையை வழங்குவது இலங்கையின் கொள்கை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொலை காணொளி ஊடாக நேற்று இடம்பெற்ற பூகோள தடுப்பூசி உச்சி மாநாட்டில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தரமான நோய்த்தடுப்பு சேவைகளை எளிதாகவும் சமமாகவும் அணுகுவதற்கான உரிமையை அனுபவித்து வருகின்றது,
மேலும் நாட்டின் நோய்த்தடுப்பு கொள்கை ஒரு குழந்தைக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளை பெறுவதற்கான உரிமையை அடிப்படையாகக் கொண்டது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
உலக சுகாதார தாபனத்தினால் முன் தகுதி பெற்ற மற்றும் பதிவுசெய்யப்பட்ட தரமான தடுப்பூசிகளில் இலங்கை முதலீடு செய்கிறது.
ஒவ்வொரு குழந்தையிலும் போதுமான நோய் எதிர்ப்பு விருத்தியை உறுதி செய்வதற்காக தடுப்பூசிகளின் தரம் மற்றும் ஆற்றலைப் பாதுகாப்பதே எமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025