ஏப்ரல்21 தாக்குதல்: இந்த மாதம் 31க்கு முன் விசாரணை அறிக்கை! (காணொளி)

ஏப்ரல்21 தாக்குதல்: இந்த மாதம் 31க்கு முன் விசாரணை அறிக்கை! (காணொளி)

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சித் பதிவு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

அதன் அறிக்கை இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சானி அபேசேகர உள்ளிட்ட பலரும் சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்