நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

மேல் மற்றும் சம்பரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும், இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேநேரம், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும், 75 மில்லிமீறறர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில், அதிகரித்த வேகத்தில் வீசும் தற்காலிக காற்று மற்றும் இடி,மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.