வவுனியாவில் விபத்து - ஒருவர் படுகாயம்!
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சுற்றுவட்டத்தை கடக்க முற்பட்ட கார் ஒன்று, எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயங்களிற்குள்ளாகினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026