கொழும்பில் தொடர்மாடியொன்றின் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பிசிஆர் சோதனை

கொழும்பில் தொடர்மாடியொன்றின் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பிசிஆர் சோதனை

கொழும்பு –  கொம்பனித்தெருவில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடியின் குடியிருப்பாளர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தொடர்மாடியில் வசிக்கும் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவரின் குடும்பத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனானவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர்கள் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தொடர்மாடியில் குடியிருப்பவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ள அதிகாரிகள், எதிர்வரும் நாட்களில் தொடர்மாடியில் குடியிருப்பவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்மாடியை முற்றாக முடக்கவில்லை என்றும் எனினும் அங்குள்ளவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் தொடர்மாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களில் எவராவது இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த தொடர்மாடியில் இராஜதந்திர சமூகத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவு வசிப்பது குறிப்பிடத்தக்கது