மலையகத்தில் முன்னெடுக்கப்படும் கொரோனா விழிப்புணர்வு வேலைத்திட்டம்

மலையகத்தில் முன்னெடுக்கப்படும் கொரோனா விழிப்புணர்வு வேலைத்திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்ட பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், காவற்துறையினர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவர்கள் இணைந்தே இந்ந நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் மலையகத்தில் உள்ள தமது இருப்பிடங்கள் சென்றுள்ளதால் பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது

எவரெனுக்கேனும், நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவிக்குமாறும், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை பொதுமக்களிடம் கோரியுள்ளது.