அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

அரச நிறுவனங்களில் புதன்கிழமை இடம்பெறும் மக்கள் சந்திப்பினை திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் மாற்றும் முகமாக வாரத்தின் புதன்கிழமைகளில் 'பொதுமக்கள் தினம்' ஆக பிரகடனப்படுத்தப்பட்டது.

புதன்கிழமைகளில் நாடாளுமன்ற அமர்வுகள், அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறுவதால் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றிலோ அல்லது அமைச்சரவையிலோ மக்கள் பிரதிநிதிகளுக்கு வெளிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே வாரத்தின் திங்கட்கிழமையை 'பொதுமக்கள் தினமாக' பிரகடனப்படுத்தினால் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்றிலிருந்து திங்கட்கிழமை 'பொதுமக்கள் தினமாக' பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.