உயிரை பணயம் வைத்து செயல்பட்ட படையினருக்கு நன்றி! கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

உயிரை பணயம் வைத்து செயல்பட்ட படையினருக்கு நன்றி! கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்

எம்.டி.நியூ டயமன் கப்பலின் தீ பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட படையினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்தியா நோக்கிச் சென்ற பனாமா நாட்டுக்குச் சொந்தமான 'எம்.டி. நியூ டயமண்ட்' என்ற கப்பலில் நேற்று முன்தினம் காலை தீப்பரவல் ஏற்பட்டது.

எனினும் நேற்றைய தினம் தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கடற்படையினர் அறிவித்திருந்தனர்.

எம்.டி.நியூ டயமன் கப்பலின் தீ பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படை ஆகியவற்றுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் அவர்கள் மேற்கொண்ட பணியை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.