பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு
தொழில் வாய்ப்புக்களை பெற்று தருவதாக கோரி வங்கி கணக்குகளில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு அவதான எச்சரிக்கையினை காவற்துறை விடுத்துள்ளது.
இவ்வாறான நிதி மோசடி தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை பிரதி காவற்துறை மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து வெளிநாடு செல்லவுள்ள நபரின் பெயர், தாய் மற்றும் தந்தை பெயர் ;தேசிய அடையாள அட்டை இலக்கம் , வீட்டு முகவரி, கைபேசி இலக்கம் மற்றும் சொத்து விபரங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு முழுமையான தகவல்களை பெற்று வங்கி கணக்கிற்கு 2 மில்லியன் ரூபாய் வரையில் பண வைப்புசெய்யுமாறு கோருவதுடன் பின்னர் வெளிநாடு செல்வதற்கு வழங்கப்பட்ட முழுமையான விபரங்களை வைத்து இவ்வாறு வங்கியில் 2 மில்லியன் ரூபாய் பணத் தொகையினை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.