மலேசியாவில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக மலேசியாவில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் கோலாலம்பூரிலிருந்து இன்று நாடு திரும்பியுள்ளனர்.
யுஎல் -319 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் மதியம் 2.08 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.