விஜய்க்குரிய அநுர செய்தியில் ஐ.தே.கவின் நரி அரசியல்...!
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை வரலாற்றில் ஒரு மிக முக்கிய படிநிலையாகக் கருதப்படும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அரைநூற்றாண்டு நினைவுப் பதிவு இன்று கடக்கின்றது.
1976 ஆம் ஆண்டில் மே 14 இல் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட்டில் தந்தை செல்வா எனப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரமான இறையாண்மை கொண்ட தமிழீழம் என்ற தனிநாட்டை அமைப்பதே ஈழத்தமிழர்களின் ஒரே தீர்வு என இந்த தீர்மானத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடையாளமாக இன்றும் உள்ள நிலையில் தற்போதைய கோடை மழைக்காலத்தில் சோடைபோகாத கொப்பளிக்கப் பாயாத மந்தியாக உள்ள சிறிலங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியும் தேசியமும் அரசியல் செய்யத் தலைப்படுகிறது.
சிறிலங்கா அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்க்குத் தெரிவித்த தனிப்பட்ட வாழ்த்தைத் தூக்கிப்பிடித்து ரணிலின் கட்சி செய்யும் இந்த அரசியல், குள்ளநரி அரசியலாகத் தெரியும் நிலையில் இந்த விடயங்களைத் தாங்கி வருகிறது செய்திவீச்சு...