பாடசாலைக்குச் செல்லத் தயாரான மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி; சீருடையை அயர்ன் செய்தபோது சோகம்

பாடசாலைக்குச் செல்லத் தயாரான மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி; சீருடையை அயர்ன் செய்தபோது சோகம்

கொழும்பு - பாதுக்கை பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த 13 வயது மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சோகமான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி மாணவி பாடசாலைக்குச் செல்வதற்காகத் தனது சீருடைகளை மின்னழுத்தியால் அயர்ன் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சாரம் தாக்கியதில் மேற்படி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.