இன்றைய ராசிபலன்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்..!
மேஷம்
பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் தாங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். அதிக வேலை காரணமாக உடலை கவனிக்காமல் விடாதீர்கள். நல்ல தூக்கம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆனால் நீங்கள் அமைதியாக இருந்தால் அது பெரிய பிரச்சினையாக மாறாது. வாழ்க்கைத்துணையுடன் புரிதல் அதிகரிக்கும். உடல்நலத்தில் சிறிய சோர்வு, தலைவலி போன்றவை வரலாம், கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
மிதுனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கடகம்
தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டைப் பெறும். மேலதிகாரிகள் உங்களை நம்பிக்கையுடன் உங்களை அணுகுவர். உங்களுடன் அவர்கள் பக்கதுணையாக இருப்பார்கள். பெண்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். பிள்ளைகளால் நன்மை உண்டு. உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
சிம்மம்
உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். தொழிலில் சிக்கல்கள் தோன்றலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பொறுமை அவசியம். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
தொழில் ரீதியாக பார்த்தால், உங்களின் முயற்சிகள் இன்று பலன்தர ஆரம்பிக்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதை நீங்கள் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் கவனம் உங்களிடம் திரும்பும். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
துலாம்
காதல் வாழ்க்கையில் இன்று நல்ல முன்னேற்றம். உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நல்ல நாள். மாணவர்களுக்கு கவனம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். கோவில் தரிசனம் மன அமைதியை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
பணநிலை பற்றி பேசும்போது, இன்று பெரிய லாபம் இல்லாவிட்டாலும், நிலையான வருமானம் இருக்கும். செலவுகளில் கட்டுப்பாடு அவசியம். முதலீடுகள் செய்ய நினைத்தால் இன்று ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
தனுசு
இன்று உங்கள் வாழ்க்கையில் மாற்றத்திற்கான ஒரு முக்கியமான நாள். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் இன்று தெளிவடையும். பல நாட்களாக நீங்கள் காத்திருந்த ஒரு செய்தி கிடைக்கலாம். அது உங்கள் தொழில் அல்லது குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
தன்னம்பிக்கை உயரும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்குவர். நண்பர்களுடன் நல்ல உறவு இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
அலுவலகத்தில் இன்று உங்களுக்கு அமைதியான நாள். தொழிலில் நிலைத்தன்மை இருக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய திட்டங்கள் மெதுவாக முன்னேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்