
நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞர்கள் - ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில் அனுமதி
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று நடந்த இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வத்தேகம பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மாத்தளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.