
இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய அமெரிக்க டொலர்களின் வீதம் கடந்த செப்டெம்பர் மாதம் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 25.2 வீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் மொத்தம் 5.81 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.