இலங்கை - அவுஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது

இலங்கை - அவுஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது

மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் 04.10.2025 இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பெய்த கடும் மழைக் காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மகளிர் அணி இரண்டாவது போட்டியில் இன்று அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருந்தது. 

முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

அதேநேரம் அவுஸ்திரேலிய அணி அதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வெற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.