கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Heavy Rain With Thunder Dept Of Meteorology

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.