இலங்கையில் பெண்களிடையே அதிகரிக்கும் நோய்

இலங்கையில் பெண்களிடையே அதிகரிக்கும் நோய்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சுவாச நோய்களுடன் தொடர்புடைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணியாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் புகைப்பிடித்தல் பழக்கமுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக வெலிசற தேசிய சுவாச நோய் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் தமித் ரோட்ரிகோ கூறினார்.

இலங்கையில் பெண்களிடையே அதிகரிக்கும் நோய் | Lung Cancer Rise In Lankan Women

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

காற்று மாசடைதல் காரணமாகவே பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளது.

ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளது.

மரபணு காரணிகளினாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.