யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி தப்பி ஓட்டம்

யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுரம் ஆலயத்திற்கு முன்பாக இடம் பெற்ற விபத்தில் 64 வயதுடைய வயோதிபர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்.

வல்லிபுர கோவிலடியை சேர்ந்த 64 வயதுடைய வயோதிபரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி தப்பி ஓட்டம் | Accident In Jaffna Driver Flees

இந் நிலையில் குறித்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மகேந்திரா ரக வாகனம் ஓட்டிவந்த நபர் தப்பிச்சென்ற நிலையில் குறித்த வாகனத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.