
கையும் களவுமாக சிக்கிய அரச அதிகாரி! அம்பலமான பாரிய மோசடி
குறைந்த தரம் வாய்ந்த உதிரி பாகங்களை அதிக விலைக்கு வாங்கி பேருந்துகளில் பொருத்தும் ஒரு மோசடி பண்டாரவளை டிப்போவில் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க நேற்று பண்டாரவளை டிப்போவின் ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
குறித்த ஆய்வுப் பயணத்தின் போது, குறைந்த தரம் வாய்ந்த உதிரி பாகங்களை அதிக விலைக்கு வாங்கி பேருந்துகளில் பொருத்தும் ஒரு மோசடி குறித்து ஊழியர்கள் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பண்டாரவளை டிப்போ தொடர்பாக எழுந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்தும் தலைவர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
மேலும் அதன் ஊழியர்களின் குறைபாடுகள் குறித்தும் விசாரணையில் கேட்டரிந்துக்கொண்டார்.
இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார மற்றும் கித்னன் செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.