இலங்கை மக்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக இலங்கையில் சுமார் 67,000 பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பன்றி இறைச்சி உள்ளிட்டவற்றை, வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்வதற்கு முற்றாக தடை விதித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக,

இலங்கை மக்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | Gover Information Department Has Issued A Warning

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாகாணங்களில் கடந்த ஆண்டு இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க, பண்ணையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல கோரிக்கை விடுத்துள்ளார்.