இலங்கையில் முதன்முறையாக அதிகாரிகளின் உதவியின்றி வாக்களித்த விழிப்புலனற்ற வாக்காளர்கள்

இலங்கையில் முதன்முறையாக அதிகாரிகளின் உதவியின்றி வாக்களித்த விழிப்புலனற்ற வாக்காளர்கள்

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக விழிப்புலனற்ற வாக்காளர்கள் மற்றொருவரின் உதவியின்றி வாக்களித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது விழிப்புலனற்ற வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தாங்களாகவே பதிவு செய்ய உதவும் வகையில் ஒரு புதிய முறையை தேசிய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்தது.

அதன் அடிப்படையிலே குறித்த வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவின் போது விழிப்புலனற்ற வாக்காளர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க இலங்கை விழிப்புலனற்றோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய இச்சிறப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சிறப்பு செயற்றிட்டத்தின் கீழ், விழிப்புலனற்ற வாக்காளர்களுக்கு ஒரு சிறப்பு ஸ்டென்சில் வழங்கப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் வாக்குச் சீட்டைச் செருகலாம், பள்ளங்கள் மற்றும் பெட்டிகளை ஸ்டென்சில் வெட்டுவதை உணர்ந்து அவர்களின் வாக்கைக் குறித்துள்ளனர்.

இதனால் அவர்களது ரகசியத்தன்மையைப் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகளின் உதவியின்றி அவர்கள் முதன்முறையாக தங்கள் வாக்குகளை வாக்களித்துள்ளனர்.