யாழ் கோவிலில் பெண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ் கோவிலில் பெண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

யாழ் கோவிலில் பெண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது | Women And Involved Theft Temple In Jaffna Arrested

சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.