தொடருந்து கழிவறையில் சீரழிக்கப்பட்ட 12 வயது சிறுமி : இந்தியாவை உலுக்கிய சம்பவம்

தொடருந்து கழிவறையில் சீரழிக்கப்பட்ட 12 வயது சிறுமி : இந்தியாவை உலுக்கிய சம்பவம்

இந்தியாவில் (India) ஓடும் தொடருந்தில் 12 வயது சிறுமியொருவர் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவயவருகையில், தனது குடும்பத்தினருடன்  தொடருந்தில் பயணித்த  சிறுமி, தெலுங்கானா பகுதியில் தொடருந்து கடக்கும் போது கழிவறைக்கு சென்றுள்ளார்.

இதனை வெகு நேரமாக கவனித்த சக பயணி ஒருவர், சிறுமியை பின் தொடர்ந்து சென்று கழிவறையில் வைத்து அவரை தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்தோடு, சம்பவத்தை காணொளியாகவும் குறித்த நபர் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனகர்.

இதையடுத்து, காவல்துறையினர் 20 வயது சந்தேக நபரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.