யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது

யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது

யாழ் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அண்மையில் அத்துமீறி உள் நுழைந்த குழு இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய் பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தேடிவந்த நிலையில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய கும்பலில் மேலும் ஒருவர் கைது | Gang That Attacked A Naked Youth In Jaffna

இந் நிலையில் மேலும் ஒரு சந்தேக நபரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடடுள்ளார்.