இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு!

 இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகராக  இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 37 சதம் ஆகவும் , விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 64 சதம் ஆகவும் உள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு! | The Value Sri Lankan Rupee Has Increased Slightly

அதோடு ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 403 ரூபா 97 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 71 சதம், விற்பனைப் பெறுமதி 342 ரூபாய் 57 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 362 ரூபாய் 44 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 22 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 4 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 72 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 235 ரூபாய் 94 சதம்.

மேலும் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 4 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 12 சதம் ஆகவும் உள்ளது.