அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. 

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

இதன்படி, நெத்தலி  ஒரு கிலோ கிராம் 145 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 950 ரூபாவாகும். 

Reduction in prices of essential food items

மேலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்  புதிய விலை 250 ரூபாவாகும். 

ஒரு கிலோ கிராம் கடலையில் விலை  38 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 450 ரூபாவாகும்.

மேலும், ஒரு கிலோ  கிராம் வெள்ளைச் சீனியின் புதிய விலை 275 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு | Reduction In Prices Of Essential Food Items