கொழும்பில் 12 பேர் அதிரடியாக கைது

கொழும்பில் 12 பேர் அதிரடியாக கைது

கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி பொலிஸாரால் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 12 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – கொழும்பு பிரதான வீதியின் டுப்ளிகேசன் வீதியில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் நேற்று (05.06.2024) மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துகின்றனர் என்று பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். 

கொழும்பில் 12 பேர் அதிரடியாக கைது | 12 People Arrested In Colomboகைது நடவடிக்கையின் போது இருபது வகையான மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.