கிளிநொச்சியில் அயல் வீட்டு நபரால் தாக்கப்பட்ட சிறுவன்

கிளிநொச்சியில் அயல் வீட்டு நபரால் தாக்கப்பட்ட சிறுவன்

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தோட்டத்தின் உரிமையாளரால் 14 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (25-02-2024) மாலை இடம்பெற்றது.

மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் தோட்டத்துக்குள் அயல் வீட்டு ஆடு சென்று பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தியது.

கிளிநொச்சியில் அயல் வீட்டு நபரால் தாக்கப்பட்ட சிறுவன் | Boy Assaulted Estate Owner In Kilinochchi

இதனால், தோட்டத்து உரிமையாளர் ஆட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 14 வயது சிறுவனை அழைத்துச் சென்று தனது தோட்டத்துக்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்

இவ்வாறு தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.