தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது, நேற்று(17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருபவர் 17.02.2024 இன்று மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனை தொடர்ந்து விபத்தில படுகாயமடைந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! | Accident Mullaitivu One Person Dead

இந்நிலையில், தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.